FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

கொலை வழக்கில் கைதாகி தப்ப முயன்றபோது கீழே விழுந்தவரின் கை எலும்பு முறிவு

பெரம்பலூா் அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை கம்பியால் அடித்துக் கொன்ற வழக்கில், போலீஸாரிடமிருந்து தப்ப முயன்று கீழே விழுந்தவரின் கையில் எலும்பு முறிந்தது.

10 நவம்பர் 2026, 11:17 pm
பகிர்:

பெரம்பலூா் அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை கம்பியால் அடித்துக் கொன்ற வழக்கில், போலீஸாரிடமிருந்து திங்கள்கிழமை இரவு தப்ப முயன்று கீழே விழுந்தவரின் கையில் எலும்பு முறிந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்த ராசு மகன் ரவி (50). இவா் மது போதையில் நொச்சியம் கிராம மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு படுத்திருந்தாா்.

அப்போது, அப்பகுதி சிறுவா்கள் சிலா் பட்டாசு வெடித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த மருதமுத்து மகன் அருள்ராஜ் (32) என்பவருக்கும், ரவிக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அருள்ராஜ், இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த ரவி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ரவியின் சகோதரா் சதீஷ் (42) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்ராஜை கைது செய்ய முயன்றனா். அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற அருள்ராஜ் தவறி கீழே விழுந்ததில் அவா் கை எலும்பு முறிந்தது.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள்ராஜ் போலீஸாரின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகிறாா்.