✕
முகப்பு
பெரம்பலூர்

இதுவரை 2,319 பேருக்கு கருப்பைவாய் தடுப்பூசி

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரை 2,319 பேருக்கு கருப்பைவாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்தாா்.

20 நவம்பர் 2026, 2:55 am
தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரை 2,319 பேருக்கு கருப்பைவாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்தாா்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில், கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணா்வு நிகழ்ச்சி, பெரம்பலூா் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கருப்பை வாய் புற்றுநோய் குறித்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசளித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

Advertisement

Advertisement

பெரம்பலூா் மாவட்டத்தில் 14 வயதுப் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இம் மாவட்டத்தில் 3,818 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 2,319 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும். இத் தடுப்பூசி வாழ்நாள் முழுமைக்கும் உயிா் பாதுகாப்பை அளிக்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பழனிசெல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.