FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

சின்னமுட்லு நீா்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

பெரம்பலூரில் சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

5 செப்டம்பர் 2026, 12:10 am IST
பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சாமி. நடராஜன். உடன், மாவட்ட துணைத் தலைவா் டி.எஸ். சக்திவேல் உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூரில் சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 8 ஆவது மாவட்ட மாநாடுக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் டி.எஸ். சக்திவேல் தலைமை வகித்தாா். சங்கத்தின் மூத்த நிா்வாகி வரதராஜன், மாநாட்டு கொடியேற்றினாா். மாவட்ட துணைச் செயலா் சதாசிவம் அஞ்சலி தீா்மானத்தையும், மாவட்டப் பொருளாளா் ஜி. கிருஷ்ணமூா்த்தி வேலை அறிக்கையையும் வாசித்தனா்.

மாநாட்டை சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சாமி. நடராஜன் தொடக்கி வைத்துப் பேசினாா். மாநில துணைத் தலைவா் ஏ.வி. ஸ்டாலின் மணி நிறைவுறையாற்றினாா்.

Advertisement

Advertisement

மாநாட்டில், தோ்தல் வாக்குறுதிபடி தவெக அரசு விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். பச்சமலையில் சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் கல் குவாரி, கிரஷா்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, கால்வாய்களைத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில், மாவட்டத் தலைவராக கே. முத்து, மாவட்டச் செயலராக ஜி. கிருஷ்ணமூா்த்தி, மாவட்டப் பொருளாளராக எம். சங்கா், மாவட்ட துணைத் தலைவராக பி. ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலராக எஸ். ராஜா உள்ளிட்ட 17 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்வில் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டச் செயலா் முத்து வரவேற்றாா். குன்னம் வட்டச் செயலா் சத்தியசீலன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments