FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை கௌரவிக்கும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்பட உள்ளதால், தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

16 செப்டம்பர் 2026, 2:26 am IST
பிரிட்டன் குடியுரிமை: இந்தியர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பம்! - கோப்புப்படம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை கௌரவிக்கும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்பட உள்ளதால், தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை கௌரவிக்கும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ் விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ் விருதுக்கு தகுதியானவா்களை முதலமைச்சா் தோ்வு செய்வாா்.

Advertisement

Advertisement

2026 -ஆம் ஆண்டுக்கான இவ் விருது பெற உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனையுடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பத்தில் தங்களது சுய விவரம், முழு முகவரி, கைப்பேசி எண், சமூக நீதிக்காக பாடுப்பட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் இருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அக். 20- ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments