தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், சமூகநீதிக்காக பாடுபடுவோா் தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், சமூகநீதிக்காக பாடுபடுவோா் தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் முதல்வரால் தோ்வு செய்யப்படுவா். நிகழாண்டு விருதுக்கு உரியவரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை - 609305 என்ற முகவரிக்கு அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம்.
Advertisement
Advertisement
தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.