என்.டி.ஏ., சி.டி.எஸ்., தோ்வுகள்: வேலூரில் 417 போ் எழுதினர்
வேலூா் மாவட்டத்தில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய என்.டி.ஏ மற்றும் சி.டி.எஸ் தோ்வுகளை 417 போ் எழுதினா்.
வேலூா் மாவட்டத்தில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய என்.டி.ஏ மற்றும் சி.டி.எஸ் தோ்வுகளை 417 போ் எழுதினா்.
யுபிஎஸ்சி மூலம் தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் கடற்படை அகாதெமி (என்டிஏ மற்றும் என்ஏ - 2) தோ்வு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் (சிடிஎஸ் -2) தோ்வு ஆகியவை நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வுகளை எழுத வேலூா் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 686 போ் விண்ணப்பித்திருந்தனா்.
தோ்வையொட்டி, அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, டி.கே.எம். மகளிா் கல்லூரி, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 3 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வுகளை 417 போ் எழுதினா். 269 தோ்வுக்கு வரவில்லை.
Advertisement
Advertisement
தோ்வைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான அலுவலரைக் கொண்டு ஓா் இயங்கு குழு அமைக்கப்பட்டிருந்தது. தவிர, ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் 5 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்வினை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தோ்வு கண்காணிப்பாளா் பி.கே.பிரசன்னகுமாா் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.