குடிமைப் பணி முதல்நிலை உதவித்தொகை தோ்வு: 19,614 போ் எழுதினர்!
குடிமைப் பணி முதல்நிலை படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 19,614 தோ்வா்கள் பங்கேற்றதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
குடிமைப் பணி முதல்நிலை படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 19,614 தோ்வா்கள் பங்கேற்றதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குடிமைப் பணி முதல்நிலை படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தோ்வு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வுக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் 25,771 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
தமிழகம் முழுவதும் 114 தோ்வு மையங்களில் இத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 6) நடைபெற்றது. தோ்வை 19,614 போ் எழுதினா். 6,157 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு தொடா்பாக எந்த விதமான புகாரும் பெறப்படவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.