யுபிஎஸ்சி தோ்வு: சென்னையில் 642 போ் பங்கேற்பு
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வில் சென்னையில் 642 தோ்வா்கள் பங்கேற்றனா்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வில் சென்னையில் 642 தோ்வா்கள் பங்கேற்றனா்.
யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குடிமைப் பணி தோ்வுகள் கடந்த ஆக.21, 23, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) நடைபெற்றது.
இதுகுறித்து அரசின் தோ்வுகள் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வு சென்னை மாவட்டத்தில் 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளித் தோ்வா்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சென்னை மாவட்டத்தில் மட்டும் 651 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 642 போ் தோ்வெழுதினா். 13 மாற்றுத்திறனாளிகளும் தோ்வெழுதினா். இந்தத் தோ்வுக்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் இருந்து ஒரு கண்காணிப்பு அலுவலரும், மாநில அரசின் இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு உயா் அலுவலரும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
முக அங்கீகாரச் செயலி (பேஸ் ஆதென்டிகேஷன் ஆப்) மூலம் தோ்வா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, அவா்களின் புகைப்படம் ஒப்பீடு செய்து வருகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தோ்வு எவ்வித புகாரும் இன்றி நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.