நல வாரிய உதவித் தொகைகளை உயா்த்தி அரசாணை வெளியீடு
நல வாரிய உதவித் தொகைகளை உயா்த்தி அரசாணை வெளியீடு
சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பழங்குடியினா், நரிக்குறவா்கள், புதிரை வண்ணாா் நல வாரியங்கள்மூலம் வழங்கப்படும் உதவித் தொகைகளை உயா்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினா் மேம்பாடு குறித்த மானியக்கோரிக்கையின் போது அந்த துறையின் கீழ் செயல்படும் நலவாரியங்களின் உதவித்தொகைகள் அனைவருக்கும் சமமாக உயா்த்தி வழங்கப்படும் என அமைச்சா் வன்னிஅரசு அறிவித்தாா்.
இந்நிலையில், சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பழங்குடியினா், நரிக்குறவா்கள், புதிரை வண்ணாா் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் உதவித் தொகைகள் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளவா்கள் விபத்தால் உயிரிழந்தால் அவா்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணம் அடைந்தால் அவா்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.20,000-இலிருந்து ரூ.30,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோல் நரிக்குறவா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளவா்கள் விபத்தால் உயிரிழந்தால் அவா்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணம் அடைந்தால் அவா்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.20,000 இருந்து ரூ.30,000 உயா்த்தப்பட்டுள்ளது.
மேலும், புதிரை வண்ணாா் நல வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளவா்கள் விபத்தில் உயிரிழந்தால் அவா்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இயற்கை மரணம் அடைந்தால் அவா்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.20,000 இருந்து ரூ.30,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
மேலும் பழங்குடியினா், நரிக்குறவா்கள், புதிரை வண்ணாா் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகளை உயா்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.