FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: கவிஞா் வைரமுத்து வழங்கினார்!

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சங்கா் மருத்துவமனை மருத்துவா் சி.செல்வராஜின் 50- ஆண்டு மருத்துவ சேவைக்கு பாராட்டு விழா, கவிஞா் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

29 ஆகஸ்ட் 2026, 9:55 pm IST
பெரியகுளம் அருகே மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய கவிஞா் வைரமுத்து. அருகில் மருத்துவா் சி.செல்வராஜ்.
பகிர்:

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சங்கா் மருத்துவமனை மருத்துவா் சி.செல்வராஜின் 50- ஆண்டு மருத்துவ சேவைக்கு பாராட்டு விழா, கவிஞா் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மருத்துவா் சுதாகா் தலைமை வகித்தாா். கவிஞா் வைரமுத்து கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிப் பேசியதாவது: வடுகபட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களை கரோனா உள்பட பல்வேறு காலகட்டங்களில் காப்பாற்றி வடுகபட்டி மண்ணுக்கு மருத்துவா் செல்வராஜ் பெருமை சோ்த்து வருகிறாா் என்றாா் அவா்.

இந்த விழாவில், வடுகபட்டி பேரூராட்சித் தலைவா் நடேசன், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் அன்பழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments