கணவரை மறைத்து வைத்துள்ளதாக கைக்குழந்தையுடன் பெண் மனு
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ள தனது கணவரை அவரது வீட்டார் மறைத்து வைத்துள்ளதாக கைக்குழந்தையுடன் பெண் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ள தனது கணவரை அவரது வீட்டார் மறைத்து வைத்துள்ளதாக கைக்குழந்தையுடன் பெண் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரிடம் தவுலத்தின்ஷா அளித்த மனு விவரம்:
ஆவுடையார்கோவில் அருகேயுள்ள களபம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுவாபிச்சை என்பவருடன் கடந்த 2013-ல் திருமணம் நடந்து எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கணவர் காட்டுவாபிச்சை வேலைக்காக குவைத் நாட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது, சொத்துப் பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
அதில், எனது கணவர் வீட்டார் என்னையும், எனது குழந்தையையும் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். மேலும், இஸ்லாமிய முறைப்படி என்னை விவாகரத்து செய்துவிட்டாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து எனது கணவர் வீட்டார், ஜமாத் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை கரூர் காவல் நிலையம், அறந்தாங்கி மகளிர் காவல்நிலையம் ஆகியவற்றில் புகார் மனு அளித்தும் விசாரிக்க மறுத்துவிட்டனர்.
தற்போது வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ள எனது கணவரையும், என்னையும் சந்திக்க விடாமல் மறைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.