குறைகேட்பு முகாமில் 27 பேருக்கு புதிய குடும்ப அட்டை
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமில் பயனாளிகள் 27 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமில் பயனாளிகள் 27 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முகாமுக்கு
ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார்.
Advertisement
Advertisement
இதில், பட்டா மாறுதல் கேட்டு 52 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைக்கு 37, இலவச வீடு வேண்டி 20, புதிய குடும்ப அட்டை கேட்டு 15, காவல்துறை நடவடிக்கைக்காக 8, இதர கோரிக்கைகளுக்காக 100 மனுக்கள் உள்பட மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒப்படைக்கப்பட்டது.
இதில், மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் விண்ணப்பித்திருந்த 27 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து, உதவி ஆணையர்(கலால்) பாலாஜி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பெ. சூரியகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.