பிளஸ்-2 தேர்வு: மாவட்டத்தில் 18, 561 பேர் பங்கேற்பு
புதுகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு மையத்தை ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
புதுகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு மையத்தை ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
தேர்வு மையங்களை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் சு. கணேஷ் கூறியதாவது:
புதுக்கோட்டை, அறங்தாங்கி ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் தலா 30 தேர்வு மையங்களில் 576 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர். புதுகை (71),அறந்தாங்கி(66) ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 137 பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் (18,617) மற்றும் தனித்தேர்வர்கள் (105) உள்பட மொத்தம் 18,722 மாணவ,மாணவிகளுக்கு தோóவுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. புதுகை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 4,702 பேர்,மாணவிகள் 5,599 பேர் உள்பட மொத்தம் 10,301 பேர் தேர்வு எழுதினர். 64 மாணவ,மாணவிகள் தோóவெழுதவில்லை. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 3,828 பேர், மாணவிகள் 4,341 பேர் உள்பட மொத்தம் 8,169 பேர் தோóவு எழுதினர். 83 பேர் தோóவு எழுதவில்லை. இதேபோல்,தனித்தேர்வர்களில், மாணவர்கள் 32 பேர், மாணவிகள் 59 பேர் உள்பட மொத்தம் 91 பேர் தேர்வெழுதினர். 14 பேர் தோóவு எழுதவில்லை. பிளஸ்-2 தேர்வில் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 161 பேர் பங்கேற்கவில்லை.
Advertisement
Advertisement
தமிழ் முதல் தாளுடன் தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏப்.1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தோóவு எழுதும் மாணவ, மாணவிகள் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாமல் அதிக மதிப்பெண்கள் எடுத்து புதுகை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது, கல்வித்துறை, அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.