FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அறந்தாங்கியில் திரௌபதையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அறந்தாங்கியில் அருள்மிகு திரௌபதையம்மன் கோவில்  கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

அறந்தாங்கியில் அருள்மிகு திரௌபதையம்மன் கோவில்  கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
        அறந்தாங்கி நகரம் குட்டகைக்குளம் மேல்கரையில் அமைந்துள்ள  கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட யாகசாலையில்  கடந்த 27 ஆம் தேதி  கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து நான்கு கால பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவு நாளான புதன்கிழமை கோ பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணஹூதி  தீபாராதனை  போன்றவை நடைபெற்ற பின்னர்,  பூஜையில் வைக்கப்பட்ட கடம் ஊர்வலமாக புறப்பட்டு காலை சரியாக 10.20 மணிக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனிதநீரை கொண்டு கும்பாபிஷேகம்  நடைபெற்றது.  இதில், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர் ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments