காரையூர் மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 36 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு
பொன்னமராவதி வட்டம் காரையூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 239 பயனாளிகளுக்கு ரூ 35.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி வட்டம் காரையூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 239 பயனாளிகளுக்கு ரூ 35.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமை வகித்தார்.
இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என 239 பயனாளிகளுக்கு 35.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்களிடமிருந்து 136 மனுக்கள் பெறப்பட்டது. தனி வட்டாட்சியர் சங்கரகாமேஸ்வரன், வருவாய் ஆய்வாளர்கள் சாதிக் பாட்சா, சரவணபிரபு, திலகம், கிராம நிர்வாக அலுவலர்கள் சித்ராதேவி, பழனிச்சாமி, பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் திட்டங்களை விளக்கிப் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.