FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேபிள் ஆப்ரேட்டர்கள்  சந்தாதாரர்  படிவத்தை நாளைக்குள் பதிவேற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா செட் டாப் பாக்ஸ்களை பெற உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் சி.ஏ.எப் படிவத்தினை வலைதளத்தில்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா செட் டாப் பாக்ஸ்களை பெற உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் சி.ஏ.எப் படிவத்தினை வலைதளத்தில் ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலம்  செட் டாப் பாக்ஸ்கள் பொது மக்களுக்கு வழங்கப்படும். 51, 720 செட் டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றுள்ளது. சந்தாதாரர்களின் சிஏஎப் படிவத்தை தமிழ்நாடு அரசு கேபிள் 
டிவி உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்களது சந்தாதாரர்களின் சிஏஎப் படிவத்தை பதிவேற்றம் செய்யாமல் உள்ள உள்ளூர்  கேபிள் ஆப்ரேட்டர்கள் உடனடியாக 31.08.2018-க்குள் சந்தாதாரர்களின் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்யாத உள்ளூர்  கேபிள் ஆப்ரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அப்பகுதியில் வேறொரு புதிய ஆபரேட்டர் நியமிக்கப்படுவர். 
எனவே, இந்த நடவடிக்கையைத் தவிர்க்குமாறு உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments