FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சரக்கு ஆட்டோ மோதி இளைஞர் சாவு

அன்னவாசல் அருகே சாலையோரத்தில் நின்ற இளைஞர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் உயிரிழந்தார். 

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

அன்னவாசல் அருகே சாலையோரத்தில் நின்ற இளைஞர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் உயிரிழந்தார். 
திண்டுக்கல் மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகிரி மகன் வைரமணி (34). இவர் புதுக்கோட்டையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஆக. 27 ஆம் தேதி அன்னவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் புதுகை செல்லும் வழியில்,  அன்னவாசல் அன்னை நகர் பிரிவு சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றுள்ளார். அப்போது திருச்சி மாவட்டம் அயன்புதூரைச் சேர்ந்த அந்துவான் (45) ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ வைரமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வைரமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைரமணி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர்சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments