FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பல்கலை. மகளிர் பாட்மிண்டன் போட்டி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வெற்றி

புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ. கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிருக்கான பாட்மிண்டன்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ. கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிருக்கான பாட்மிண்டன் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதலிடம் பெற்றது.     பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போட்டிகள் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போட்டியை  கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர்  கவிதா சுப்பிரமணியன்  தொடங்கி வைத்தார்.
பல்கலைக்கழக விளையாட்டு குழு செயலர் முனைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
போட்டியில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 
பாட்மிண்டன் போட்டியில் போட்டியில்  திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.  கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி அணியினர் இரண்டாமிடமும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியினர் மூன்றாமிடத்தையும்  பிடித்தனர்.
டேபிள் டென்னிஸ் போட்டியில்  கும்பகோணம் இதயா கல்லூரி அணியினர்  முதலிடமும், திருச்சி பிஷப் ஹீபர் அணியினர்  இரண்டாமிடமும் கும்பகோணம் ஞானாம்பிகை கல்லூரி அணியினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.  தொடர்ந்து புதன்கிவமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் பரசுராமன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இவர்கள், தென்னிந்திய பல்கலை. அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments