FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2 ஆயிரம் மின் பணியாளர்கள் விரைவில் புதுகை வருகை

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு   மின் இணைப்புகளை வழங்குதற்காக

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு   மின் இணைப்புகளை வழங்குதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் மின் பணியாளர்கள் விரைவில் வர உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்குவது குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
 மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.
புயல் ஏற்பட்டவுடன் உடனடியாக பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உள்ளூர், பிற மாவட்ட மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 5, 500 மின்வாரியப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட
 போர்க்கால அடிப்படையிலான பணிகளின் மூலம்  மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
 இதன் தொடர்ச்சியாக தற்பொழுது விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கென புதுக்கோட்டை மாவட்ட மின் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் மின் ஊழியர்கள் வர உள்ளனர். 
இப்பணிக்கு தேவையான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தற்பொழுது வரப்பெற்று உள்ளது. விவசாய மின்இணைப்பு வழங்கும் பணியினை கண்காணித்து விரைந்து பணிகளை முடித்திட மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார் கணேஷ்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments