அரசு மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு
விராலிமலை அருகே அரசு மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக் குழு பெண்கள் உள்ளிட்டோர் விராலிமலை வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
விராலிமலை அருகே அரசு மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக் குழு பெண்கள் உள்ளிட்டோர் விராலிமலை வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
விராலிமலை வட்டம் ராஜாளிப்பட்டி, காரடைக்கம்பட்டி, ஒட்டன்காட்டுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 175-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 225 பேர் அருகேயுள்ள கவரபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது அரசு மதுபானக் கடை திறக்க கட்டப்படும் சாலை வழியாகத்தான் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வர வேண்டிய சூழல் உள்ளது.
மதுக்கடை திறந்தால் மாணவ, மாணவிகள், பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மனஉளைச்சல் ஏற்படும். மேலும் அப்பகுதி வழியாக சென்று வரும் பெண்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.
எனவே மதுகடை அமைக்க நடைபெறும் பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.