கந்தர்வகோட்டை கடைவீதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல்
கந்தர்வகோட்டை ஊராட்சி கடைவீதியில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது. கந்தர்வகோட்டை ஊராட்சியில்
கந்தர்வகோட்டை ஊராட்சி கடைவீதியில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது. கந்தர்வகோட்டை ஊராட்சியில் தஞ்சை சாலை, திருச்சி, புதுகை, பட்டுக்கோட்டை, கறம்பக்குடி சாலை, பெரியகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் தினமும் அகற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததால் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன. மேலும் காய்கறிகள், பழம் உள்ளிட்ட கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுகின்றன. இதனால், சுதாகார கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத் தரப்பில் கூறுகையில், குப்பை அள்ளும் வண்டி பழுதடைந்துள்ளதால் குப்பைகளை அள்ள முடியவில்லை. இன்னும் ஒரிரு நாளில் குப்பைகள் அள்ளப்படும் என்றனர். மாற்று வாகனம் மூலம் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.