FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மணமேல்குடி, ஆர்.புதுப்பட்டினம் கடற்கரையில் சுனாமி ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்டத்துக்குள்பட்ட மணமேல்குடி, ஆர்.புதுப்பட்டினம் கடற்கரை கிராமங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்துக்குள்பட்ட மணமேல்குடி, ஆர்.புதுப்பட்டினம் கடற்கரை கிராமங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
கடலோரப் பகுதிகளில் சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகள் நேரிட்டால் பொருள்கள் சேதம், மனித உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படும். அவற்றிலிருந்து பொதுமக்கள், மீனவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து சுனாமி ஒத்திகை மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை கடலோரப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, கடலில் சுனாமி ஏற்படும் போது மக்கள் எவ்வாறு தப்பிப்பது குறித்து மீனவர்களுக்கு கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு  மீட்புத் துறையினர் செயல்விளக்கத்துடன் எடுத்துக் கூறினர்.  மணமேல்குடி அருகே பொன்னகரம், மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம்  உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிகளில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம், கோட்டைப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.காமராஜ், ஆவுடையார்கோவில் தேர்தல் வட்டாட்சியர் அ.ஜபருல்லா, திருப்புனவாசல் கடலோர காவல்படை உதவி ஆய்வாளர் ரகுபதி, மணமேல்குடி உதவி ஆய்வாளர் எஸ்.ஜவகர்,ஆவுடையார்கோவில் தீயணைப்பு மற்றும் 
மீட்புப் பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments