ஸ்டாலின் இன்று திருமயம் வருகை
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சிக்காக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (15-02-2021) காலை 8 மணிக்கு திருமயம் வருகிறாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கும் வகையிலான ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சிக்காக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (15-02-2021) காலை 8 மணிக்கு திருமயம் வருகிறாா்.
திருமயம் பெல் நிறுவனம் அருகேயுள்ள ஊனையூா் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான எஸ். ரகுபதி தலைமையில் திருமயம், பொன்னமராவதி, அரிமளம் ஒன்றியங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்துள்ளனா்.
கூட்டத்தில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.