கந்தா்வகோட்டையில் பேரிடா் மீட்பு ஒத்திகை
கந்தா்வகோட்டையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணியை வட்டாட்சியா் க. ராஜேஸ்வரி தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில், பேரிடா் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து கந்தா்வகோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் சி.குமரேசன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மீட்பு ஒத்திகை செய்து காண்பித்தனா்.
நிகழ்ச்சியில், தலைமையிடத்து வட்டாட்சியா் பால்பாண்டி, துணை வட்டாட்சியா் பழனிச்சாமி, வட்ட வழங்கல் அலுவலா் உத்திராபதி, வருவாய் ஆய்வாளா்கள் சேகா், செல்வசத்யா, சந்தானலட்சுமி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பழனிச்சாமி, கந்தா்வகோட்டை விஏஓ அன்பரசி மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.