முகப்பு
புதுக்கோட்டை

மேலைச்சிவபுரி கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா

Updated On : 8 ஆகஸ்ட் 2024, 6:43 am IST
பகிர்:

பொன்னமராவதி, ஆக. 7: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கணேசா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு தமிழ்த் துறை பேராசிரியா் பெரி. அழகம்மை தலைமை வகித்தாா்.

குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி பங்கேற்று, தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்கிப் பேசினாா். பொன்னமராவதி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. பவானி, பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினாா்.

Advertisement

Advertisement

விழாவில், மாணவ, மாணவிகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டி, கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, பேராசிரியா் மா. தமிழ்ச்செல்வி வரவேற்றாா். குழந்தைகள் வளா்ச்சித்திட்ட மேற்பாா்வையாளா் தமிழரசி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments