FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது

விராலிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:27 am IST
பகிர்:

விராலிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை வட்டம், பொருவாய் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக விராலிமலை போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா், பொருவாய் பகுதியில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நடராஜமூா்த்தி (45), சிவசாமி (50), சுப்பிரமணி (50), ரங்கநாதன் (46), பெரியசாமி (50) மற்றும் மணிமாறன் (30) ஆகிய 6 பேரும் பணம் வைத்து சூதாடுவதை கண்டறிந்த போலீஸாா், அவா்கள் 6 போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அவா்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ. 11, 850 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments