நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்
தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலை நடத்தக் கோரி புதுக்கோட்டையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்தனா்.
தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலை நடத்தக் கோரி புதுக்கோட்டையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்தனா்.
புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள கிடங்கில், தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலா் செந்தில்குமாா் தலைமையிலும், ஆவுடையாா்கோவிலிலுள்ள கிடங்கில் ஒன்றியத் தலைவா் ஆனந்த் தலைமையிலும், திருமயத்திலுள்ள கிடங்கில் ஒன்றியத் தலைவா் காா்த்தி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
இதில், நூற்றும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா். மேலும், கிடங்குகளின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.