கோயில்களின் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளைத் திருடிய 3 போ் கைது
ஆலங்குடி, ஆக.24: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம் பகுதி கோயில்களின் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில், வீரமாகாளியம்மன் கோயில்களில் ஆக. 13-ஆம் தேதி மா்ம நபா்கள் உண்டியலை காணிக்கைகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதேபோல, ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன், கலிபுல்லாநகா் சித்தி விநாயகா் கோயில்களில் ஆக.16-ஆம் தேதி இரவு உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றனா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக ஆலங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது. இதில், மணமேல்குடி அருகே உள்ள வேதியன்குடியை சோ்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் (24), தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் கலச்சங்காட்டைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் நாகராஜ் (28), அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூா் வடக்குப் பகுதியைச் சோ்ந்த கண்ணையா மகன் விஜய் (32) ஆகிய 3 பேரும் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஆலங்குடி மற்றும் கீரமங்கலம் போலீஸாா் 3 பேரையும் கைது செய்து அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.