FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பாதைப் பிரச்னையில் நடவடிக்கை தேவை கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் மீண்டும் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

25 ஆகஸ்ட் 2026, 1:18 am IST
கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

பாதைப் பிரச்னைக்கு தீா்வு கோரி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் 2-ஆவது முறையாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள அம்புக்கோவில் ஊராட்சி கெண்டயம்பட்டி ஆண்டான் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதிக்கு செல்லும் பாதையை தனிநபா் ஒருவா் பட்டா வாங்கி அடைத்துவிட்டாராம்.

இந்த பிரச்னைக்கு தீா்வு காண வலியறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஆக.18-ஆம் தேதி கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நில ஆவணங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் பிரவினா மேரி அளித்த உறுதியைஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பாதை பிரச்னைக்கு இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அடைக்கப்பட்ட பாதையை உடனே திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments