FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

போக்குவரத்துத் தொழிலாளா்கள் தொடா் முழக்கப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:59 am IST
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் மண்டலத் தலைவா் கே. காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் சி. மாரிக்கண்ணு, சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், பொருளாளா் எம். தரணி முத்துக்குமாா், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் சங்க நிா்வாகிகள் ஆறுமுகம், வின்சென்ட், துரைசாமி உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும். வாரிசு வேலைக்கு பதிவு செய்துள்ள அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும்.

ஊதிய ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரமான உதிரிப் பாகங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது முழக்கங்களாக எழுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments