FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

செம்பட்டிவிடுதி, குளப்பெண்பட்டியில் குடிநீா் கோரி மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி, குளப்பெண்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:02 am IST
கறம்பக்குடி அருகேயுள்ள குளப்பெண்பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி, குளப்பெண்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி ஊராட்சிக்குள்பட்ட முருகராஜ் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றின் மின் மோட்டாா் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், உடனே குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செம்பட்டிவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை துணை வட்டாட்சியா் லெட்சுமணன், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன், செம்பட்டிவிடுதி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

இதேபோல, கறம்பக்குடி அருகேயுள்ள குளப்பெண்பட்டி வடக்கு பகுதி மக்களுக்கு சிலவாரங்களாக சரிவர குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் காலிங்குடங்களுடன் குளப்பெண்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டங்களால் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments