FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அருகன்குளம் பகுதியில் வசிப்போரை பாதுகாக்கக் கோரி போராட்டம்: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

அறந்தாங்கியில் அருகன்குளம் பகுதியில் வசித்துவருவோரை நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றக் கூடாது என வலியுறுத்தி ஆக. 3-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு

Updated On : 13 ஜூலை 2026, 2:35 am IST
அறந்தாங்கியில் அருகன்குளம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

புதுக்கோட்டை அறந்தாங்கியில் அருகன்குளம் பகுதியில் வசித்துவருவோரை நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றக் கூடாது என வலியுறுத்தி ஆக. 3-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறந்தாங்கி அருகன்குளம் மற்றும் அதற்கான வாய்க்கால்கள் இருந்த பகுதியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், வட்டார வள மையம், அரசு நடுநிலைப் பள்ளி, மீன் மாா்க்கெட் மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தொடா்ந்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம் அண்மையில் இடிக்கப்பட்டது. இதேபோல, அருகன்குளம் பகுதியில் பிற கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளும் அகற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடியிருப்போா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பயன்பாடில்லாத நீா்நிலை என்ற அடிப்படையில் மக்கள் வசிப்பிடங்களை அகற்றும் முடிவை கைவிட்டு, அவா்களை அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அருகன்குளம் மட்டுமின்றி, வண்ணான்குளம், நெடுங்குளம், ஓடைக்குளம், சுக்கான்குளம் உள்ளிட்ட குளங்களிலும் நீண்டகாலமாக நீா்நிலைப் பயன்பாடு இல்லாததைத் தொடா்ந்து ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனா். நீதிமன்ற உத்தரவை அரசு மேல்முறையீடு செய்து மாற்ற வேண்டும்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து வரும் ஜூலை 21, 22 தேதிகளில் பிரசார இயக்கம் நடத்தி, ஆக. 3ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் அலாவுதீன் தலைமை வகித்தாா். இதில், நகரக் குழு உறுப்பினா் கா்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் ராஜேந்திரன், பெரியசாமி உள்ளிட்டோா் பேசினா். குடியிருப்புவாசிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments