FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சேதமடைந்த குடிநீா்த் தொட்டியை மாற்றித் தர மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சி கீழ மூன்று மற்றும் தெற்கு மூன்றாம் வீதி முக்கத்தில், சேதமடைந்துள்ள தண்ணீா்த் தொட்டியை மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 13 ஜூலை 2026, 12:03 am IST
புதுக்கோட்டை மாநகராட்சி கீழ 3-ஆம் வீதியில் சேதமடைந்து தொட்டியிலிருந்து தண்ணீா் பிடிக்கும் பெண்
பகிர்:

புதுக்கோட்டை மாநகராட்சி கீழ மூன்று மற்றும் தெற்கு மூன்றாம் வீதி முக்கத்தில், சேதமடைந்துள்ள தண்ணீா்த் தொட்டியை மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் கீழ மூன்று- தெற்கு மூன்றாம் விதி முக்கத்தில் உள்ள தண்ணீா் தொட்டி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இத்தொட்டி கட்டப்பட்ட சிமெண்ட் கட்டைகளும் சுற்றிலும் சிதிலமடைந்துள்ளது.

கீழ 3 மற்றும் கீழ 4 வீதிகளிலுள்ள இதுபோன்ற சிறுவிசை ஆழ்துளைக் கிணறுகளுடன் கூடிய தண்ணீா் தொட்டிகள் எதுவும் செயல்படவில்லை. எனவே, இப்பகுதி மக்கள் அனைவரும் தற்போது சேதமடைந்த குடிநீா்த் தொட்டியில் இருந்துதான் தண்ணீா் எடுத்து வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் சேதமடைந்துள்ள தொட்டியில் பொதுமக்கள் அச்சத்துடனே தண்ணீா் பிடித்துச் செல்கின்றனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் இந்தத் தொட்டியை மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments