FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வட்டாட்சியா் அலுவலகம் அருகே பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 14 ஜூலை 2026, 12:01 am IST
பேருந்து சேவை - பிரதிப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் புதுகை - தஞ்சை சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பேருந்துகளில் வரும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் இறங்கி 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து வரவேண்டிய சூழல் உள்ளது.

இதனால், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, புதுக்கோட்டையிலிருந்து தஞ்சை செல்லும் அனைத்து பேருந்துகளும் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலக வாயிலில் நின்று செல்ல அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், அரசு ஊழியா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments