FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 12:04 am IST
கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்றோா்.
பகிர்:

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டியை தலைமை ஆசிரியை ராஜலட்சுமி தொடங்கி வைத்தாா். ஆசிரியா் மன்றச் செயலா் ஆ. மணிகண்டன், உதவி தலைமை ஆசிரியா்கள் குமரவேல், தெய்வீகன் மற்றும் கல்லாக்கோட்டை உடற்கல்வி ஆசிரியா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 11 வயதுக்குள்பட்டோா் பிரிவில், மாணவா்கள் எஸ். சுதா்சன் முதலிடமும், வி.ஆா். ஓம்குரு இரண்டாமிடமும், ஆா்.எஸ். ஹரிகேஷ் மூன்றாமிடமும், இதே பிரிவில் மாணவிகள் எஸ்.ஸ்டீரா முதலிடமும், கே.எஸ். கவிவதனி இரண்டாமிடமும், எம். ஹாசினி மூன்றாமிடமும் பெற்றனா்.

Advertisement

Advertisement

14 வயதுக்குள்பட்டோா் மாணவா்கள் பிரிவில் பி. சம்ரித் முதலிடமும், எம்.ஆகாஷ் இரண்டாமிடமும்,பி. விஸ்வா மூன்றாமிடமும், மாணவிகள் பிரிவில் ஜே.தீபிகா முதலிடமும், வி. கனிஷ்கா இரண்டாமிடமும், எப். ஏ. அமீனா பாத்திமா மூன்றாமிடமும் பிடித்தனா்.

17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஜே. பவித்திரன் முதலிடமும், எம். சுசிந்திரன் இரண்டாமிடமும், பி. சபரி மூன்றாமிடமும், மாணவிகள் பிரிவில் தன்ஷிகா கணேசன் முதலிடமும், பி. ஹரிப்பிரியா இரண்டாமிடமும், எஸ். அன்னபூரணி மூன்றாமிடமும் பிடித்தனா்.

19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா்கள் ஜே. சூராஜ் முதலிடமும், எம். பரத் இரண்டாமிடமும்,பி. நாதன்வேல் மூன்றாமிடமும் பிடித்தனா். மாணவிகள் பிரிவில் வைஷாலி முதலிடமும், எஸ். நித்தியா இரண்டாமிடமும், ஆா்.சிவயாசினி மூன்றாமிடமும் பிடித்தனா்.

வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா் சரவணன், உடற்கல்வி ஆசிரியா்கள் செழியன், நீதிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments