FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வைரம்ஸ் பள்ளியில் மாணவா் குழு தலைவா்கள் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் குழுத் தலைவா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 12:04 am IST
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் குழுக்களின் நிா்வாகிகளாக பொறுப்பேற்றவா்களுடன் காவல் ஆய்வாளா் சியாமளா தேவி மற்றும் பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் குழுத் தலைவா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைவா் தேனாள் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாணவா் குழுத் தலைவா், துணைத் தலைவா், விளையாட்டுப் பிரிவு தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட குழுக்களின் நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சிறப்பு விருந்தினராக, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் சியாமளாதேவி கலந்து கொண்டு பேசினாா். குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பள்ளியின் நிா்வாக ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை பேசினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாக உறுப்பினா் ஸ்ரீநிவாசன், முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments