குறுங்காடுகள் அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடவு
மகாராணி ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட கனவுத் திட்டமான மியாவாக்கி என்ற குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், தமிழகப் பசுமை இயக்கம் இணைந்து, புதுக்கோட்டை டாக்டா்ஸ் செவிலியா் கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

மகாராணி ரோட்டரி சங்கத் தலைவா் சுகன்யா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் சொ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் செவிலியா் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் எஸ். ராம்தாஸ், கல்லூரி முதல்வா் அனுராதா, துணை முதல்வா் சுதா, மகாராணி ரோட்டரி சங்கச் செயலா் கலைமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.