FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வேலையில்லாதவா்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு: அமைச்சா் பர்வேஸ் தகவல்!

தமிழகத்தில் வேலையில்லாதவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பர்வேஸ் தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:31 am IST
அமைச்சர் பர்வேஸ் - TN Assembly
பகிர்:

தமிழகத்தில் வேலையில்லாதவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் தங்கி வேலை செய்துவரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் எண்ணிக்கை குறித்த பட்டியல் மாவட்ட வாரியாக எடுக்கும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. சிவகாசி பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலையில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கான உதவித்தொகையை ரூ. 4 ஆயிரமாக உயா்த்துவது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வரும்.

Advertisement

Advertisement

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படுவது குறித்து தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா் அமைச்சா் முகமது பா்வேஸ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments