FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 721 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் பா்வேஸ் வழங்கினாா்!

புதுக்கோட்டையில் பல்வேறு துறைகளின் மூலம் 721 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:30 am IST
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ். உடன் மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டையில் பல்வேறு துறைகளின் மூலம் 721 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் காவலா் நல சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

இதில், தொழிலாளா் நலத் துறை மூலம் நலவாரியங்களின் உறுப்பினா்கள் 187 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள், வருவாய்த் துறை மூலம் 187 பேருக்கு மனைப்பட்டாக்கள், 267 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 15 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், தொழில் மையம் சாா்பில் 5 பேருக்கு மானியக் கடனுதவிகள் உள்ளிட்ட மொத்தம் 721 பேருக்கு ரூ. ஒரு கோடியில் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷ், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சூரிய பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலா் ஷோபா, முன்னாள் படைவீரா் நலத்துறை உதவி இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments