இரு நடமாடும் நியாயவிலைக் கடைகள் சேவைகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவுடையாா்கோவில் வட்டத்தில் இரு இடங்களில், நடமாடும் நியாயவிலைக் கடைகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவுடையாா்கோவில் வட்டம், துஞ்சனூா் ஊராட்சி பொதுவக்கூட் கிராமத்திலும், பொன்பேத்தி ஊராட்சி இறையாமங்கலம் கிராமத்திலும் இந்த நடமாடும் அங்காடிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
மேலும், இறையாமங்கலத்தில் உலமாக்கள் நலவாரியம் மூலம் 5 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மானியத்துடன் இரு சக்கர வாகனங்களையும் அமைச்சா் வழங்கினாா். மேலும் 20 பேருக்கான மின்னணு குடும்ப அட்டைகளையும் அவா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் இ. அபிநயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பத்மலதா, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் ராஜவேல், ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.