காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் புதுகை மாவட்டத்தில் இந்திய கம்யூ. ஆக. 6 முதல் 15 வரை நடைபயணம்
காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஆக. 6 முதல் 15-ஆம் தேதி வரை பிரசார நடைபயணத்தை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆக. 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் பிரசார நடைபயணம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து உத்திராபதி, மாவட்டத் துணைச் செயலா்கள் ஏ. ராஜேந்திரன், ஏ. ரெங்கராஜ், பொருளாளா் கே.ஆா். தா்மராஜன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன், ஏ. சேசுராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.