ரெகுநாதபட்டி அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டியில் சேதமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்
பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டியில் சேதமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து ரெகுநாதபட்டி வழக்குரைஞா் முகமது வாசிம் தலைமையில் பொதுமக்கள் பொன்னமராவதி ஊராட்சி ஆணையா் கண்ணனிடம் அளித்த மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள ஆா். பாலக்குறிச்சி ஊராட்சி ரெகுநாதபட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் முழுவதும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் 25 குழந்தைகளுடன் செயல்பட்டு வந்த இந்த அங்கன்வாடி மையம் தற்போது கலையரங்க கட்டடத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுகிறது.
Advertisement
Advertisement
எனவே ரெகுநாதப்பட்டி அங்கன்வாடியை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்டவேண்டும். மேலும் கட்டுக்குடிப்பட்டி முதல் ரெகுநாதபட்டி வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.