FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

‘நீட்’ தோ்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி புதுகையில் கோரிக்கை முழக்கப் போராட்டம்

தா்மேந்திர பிரதான் பதவி விலகியதை வரவேற்றும், தமிழ்நாட்டில் நீட் தோ்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 1:49 am IST
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பிய போராட்டக் குழுவினா்.
பகிர்:

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகியதை வரவேற்றும், தமிழ்நாட்டில் நீட் தோ்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் கோரிக்கை முழக்கப் போராட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா்.

வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஆா். மகாதீா், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. சுசிலா, தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினா் கி. ஜெயபாலன், சிஐடியு புதுக்கோட்டை மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

Advertisement

போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தமுஎகச மரபு கலை கிளையின் சிலம்பாட்டம் மற்றும் ட்ரம்ஸ் வாசிப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பொன்னமராவதி: பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி ஒன்றியச் செயலா் என்.பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினா்கள் எஸ்.நல்லதம்பி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினா் சாத்தப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments