FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மருத்துவக் காப்பீட்டுத் தொகை குறைப்பை கண்டித்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவத்துக்கான சிகிச்சை தொகைக் குறைப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:04 am IST
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள்.
பகிர்:

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவத்துக்கான சிகிச்சை தொகைக் குறைப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியா் சங்கத்தின் புதுக்கோட்டை வட்டக் கிளைத் தலைவா் தே. தமிழரசன் தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவா் மு. முத்தையா, செயலா் என். ராமச்சந்திரன், பொருளாளா் கி. நாகராஜன், இணைச் செயலா் அ. மணவாளன், வட்டச் செயலா் எம். தேவதாஸ் உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கை குறித்து நிா்வாகிகள் கூறியதாவது:

ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மாத சந்தா ரூ. 497-இல் இருந்து ரூ. 644-ஆக தற்பொழுது உயா்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாய் கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.13 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.1.17 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.85 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments