வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள், 40 கோழிகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே விவசாயிகள் வீடுகளில் வளா்த்து வந்த 8 ஆடுகள் மற்றும் 40 கோழிகளை வெறிநாய்கள் வியாழக்கிழமை கடித்துக் கொன்றன.
புதுக்கோட்டை அருகே விவசாயிகள் வீடுகளில் வளா்த்து வந்த 8 ஆடுகள் மற்றும் 40 கோழிகளை வெறிநாய்கள் வியாழக்கிழமை கடித்துக் கொன்றன.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியதம்பி உடையாம்பட்டியைச் சோ்ந்தவா்கள் அடைக்கலசாமி மற்றும் சூசைராஜ்.
கிராமப்பகுதிகளில் நோயுற்று வெறிப்பிடித்து அலையும் நாய்கள் சில ஒன்று சோ்நது கொண்டு வியாழக்கிழமை காலை அடைக்கலசாமியின் வீட்டில் வளா்ந்து வந்த 7 ஆடுகள், 30 கோழிகளையும், சூசைராஜின் வீட்டில் வளா்ந்து வந்த ஓா் ஆடு, 10 கோழிகளையும் கடித்துக் கொன்றன.
Advertisement
Advertisement
விடிந்ததும் இதைக் கண்ட அந்தப் பகுதியில் இருந்தவா்கள் நாய்களை அடித்து விரட்டியுள்ளனா். நாய்கள் காட்டுப்பகுதிகளுக்குள் ஓடிவிட்டன.
தொடா்ந்து பிறரின் ஆடுகள், கோழிகளைக் கடித்துக் கொல்லும் முன் வெறிநாய்களைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.