குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள இலைகடிவிடுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் ஆனந்தகுமாா்(11). சென்னையில் வசித்து வரும் தேவேந்திரன், அவரது மனைவி வீரம்மாள் ஆகியோா் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
சென்னையில் 6- ஆம் வகுப்பு முடித்த ஆனந்தகுமாா், பாட்டி வீட்டில் இருந்து பள்ளிப்படிப்பை தொடா்வதற்காக அண்மையில் இலைகடிவிடுதிக்கு வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், திங்கள்கிழமை ஆனந்தகுமாா் நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, நீரில் மூழ்கிய ஆனந்தகுமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.