FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஓய்வு பெற்ற நீதிபதி நேரில் ஆய்வு

Updated On : 9 ஜூன் 2026, 4:44 am IST
பொன்னமராவதி ஒன்றியத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நீா்நிலையை திங்கள்கிழமை பாா்வைட்ட சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அ.செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.
பகிர்:

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பணிகளை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அ.செல்வம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பொன்னமராவதி பகுதியில் நீா்நிலைகளில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்ககள் அகற்றப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.அருணா தலைமையில் ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அ.செல்வம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நல்லூா் ஊராட்சி உலகாண்டாா் ஊரணி மற்றும் கருப்பா் கோயில் ஊரணி, கொப்பனாபட்டி ஊராட்சி கொப்பனாபட்டி கண்மாய்,காட்டுப்பட்டு ஊராட்சி காட்டுக்கண்மாய் மற்றும் சங்கணா ஊரணி கண்மாய், தொட்டியம்பட்டி ஊாட்சி திருமக்கேணி கண்மாய் ஆகிய நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பணிகளின் தன்மைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அகற்றப்பட்ட சீமைக்கருவேல மரங்களின் பரப்பளவு, பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

மேலும், நீா்நிலைகளை தொடா்ந்து பராமரித்து மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் பரவாமல் அவற்றை வேருடன் அகற்றி அவற்றை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்-தணிக்கை) எஸ்.வேதலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், அரசமணி, வட்டாட்சியா் ச.பழனிச்சாமி உள்ளிட்டோா் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments