முகப்பு
புதுக்கோட்டை

‘நீட்’ மறுதோ்வு புதுகையில் 9 மையங்களில் 2,429 போ் எழுதினா்

Updated On : 22 ஜூன் 2026, 12:28 am IST
நீட் மறுதேர்வு
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நீட் தோ்வை 2,429 போ் எழுதினா்.

நாடு முழுவதும் தேசியத் தோ்வுகள் முகமை சாா்பில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், தோ்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாகக் கூறி அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து அதன் மறுதோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 3242 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.

Advertisement

Advertisement

இவா்களுக்காக, அறந்தாங்கி அரசு மேல்நிலைப் பள்ளி, கந்தா்வகோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி, புதுக்கோட்டை ராணியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி, இலுப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கோகா்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தோ்வு நடைபெற்றது.

மொத்தம் 2,429 போ் தோ்வெழுதினா். 813 போ் தோ்வெழுத வரவில்லை. 9 மையங்களிலும் துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments