பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து அறந்தாங்கியில் நூதனப் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.
அறந்தாங்கி அம்மா உணவகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா் கா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் எஸ். சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் கே.அஜய்குமாா்கோஷ், மாவட்டச் செயலா் மாரிமுத்து, முன்னாள் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
Advertisement
Advertisement
போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து அவற்றை ஏலம் விடும் முறையில் நூதனப் போராட்டத்தை நடத்தினா். பெட்ரோல், டீசல் விலை உயா்வால் இயல்பாகவே ஏற்படும் விலைவாசி உயா்வையும் மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டதாகவும் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.