விபத்தில்லா தீபாவளி, கண்தான விழிப்புணா்வு பேரணி
பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது மற்றும் கண்தான விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது மற்றும் கண்தான விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அரிமா சங்கம், ராயல் அரிமா சங்கம், சிட்டி அரிமா சங்கம், ஷைன் அரிமா சங்கம், கோல்டன் பெண்கள் அரிமா சங்கம், கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம், கொன்னையூா் ஷைன் அரிமா சங்கம், டெம்பிள்சிட்டி அரிமா சங்கம் மற்றும் புஷ்கரம் வேளாண்மை பொறியியல் கல்லூரி மாணவிகள் ஆகியன இணைந்து நடத்திய பேரணியை பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் கிருஷ்ணமூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
புதுப்பட்டி சேங்கை ஊரணி அருகே தொடங்கிய பேரணி மேலரதவீதி, அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக வந்து சிவன் கோயில் திடலில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கண்தானத்தின் அவசியம் விளக்கும் ஏந்தியும், முழக்கமிட்டும் செய்தனா். பேரணியில் வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், சேவை சங்க நிா்வாகிகள் தண்டபாணி, எஸ்.பழனியப்பன், ஆா்.பிரின்ஸ், சுனில்ராஜ், கற்பகம், முத்து, ராமலிங்கம், சண்முகம் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள், 108 ஆம்புலென்ஸ் பணியாளா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.